நீங்கள் வேலைக்கு செல்பவராக இருக்கும்பட்சத்தில் விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வேலைக்கு செல்வது உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு நல்லது அல்ல என சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும், விடுமுறை எடுத்தாலும் தொடர்ந்து அலுவலகம் சம்மந்தமான வேலைகளை செய்வதும் தற்போதைய தொழில்நுட்ப உலகில் வளர்ந்து வருகிறது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே தேவைப்படும்போது விடுமுறை எடுத்து தொடர்பு எல்லைக்கு வெளியில் செல்வதே நல்லது.