முன்னாள் முதல்வர் எம்ஜி ஆர் இன் 37 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி மன்னார்குடி தற்காலிக பெருந்த நிலையம் எதிரே அமைந்துள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. த. வெ. கவின் திருவாரூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் யு. வி. எம் ராஜராஜன் தலைமையில் தவெக தொண்டர்கள் எம். ஜி. ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.