மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது நேற்று இரவு ஐந்தாவது நாள் விழாவாக பஞ்சமுக ஹனுமன் வாகனத்தில் ராஜகோபால சுவாமி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது யானை வாகன மண்டபத்திலிருந்து மன்னார்குடியின் ராஜ வீதிகளில் வளம் வந்த ராஜகோபால சுவாமிக்கு கண் கவர் வான வேடிக்கைகளுடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.