மகளிர் திட்ட தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சுய உதவிக் குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. கண்காட்சியை திட்ட இயக்குனர் பொன்னம்பலம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் தயாரித்த பல்வேறு கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.