மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது நாள்தோறும் ராஜகோபால சுவாமி பல்வேறு வாகனங்களில் பலவித அலங்காரங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் விழாவின் 15 வது நாளான நேற்று இரவு ராஜகோபால சுவாமி ருக்மணி சத்தியபாமா உடன் கோஇரத்தத்தில் எழுந்தருளினார் கோவிலில் இருந்து புறப்பட்டு யானை வாகன மண்டபத்தை அடைந்தார் வழிநெடுகிளும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர் முக்கிய விழாவான தேர் திருவிழா நாளை மாலை நடைபெற உள்ளது.