தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான ஊதியத்தை வழங்காத மத்திய அரசை கண்டித்து மேலவாசல் கிராமத்தில் மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகையான நான்காயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும். ஹிந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.