புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து பின்னர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவர். அந்த வகையில் இன்று ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மஸ்தான் பள்ளி தெருவளாகத்தில் இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.