மன்னார்குடி - Mannargudi

ஆலங்குடி: வலங்கைமானில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை

ஆலங்குடி: வலங்கைமானில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை

நன்னிலம் உட்கோட்டம், ஆலங்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் பொதுமக்கள் காவல்துறையினருடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அவ்வாறு செயல்பட்டால் குற்ற செயல்களை தவிர்கலாம் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் அது குறித்து எவ்வித தயக்கமின்றி காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தார். போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா சமுதாயம் அமையவும், தலைக்கவசம் அணிவதன் மூலமாக உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றும், எளிதல் பணம் ஈட்டலாம் என சைபர் குற்றவாளிகள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாரதிர்கள் என்றும், சைபர் க்ரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www. cybercrime. gov. in -ல் புகார் அளிக்குமாறு தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக 9498100865 என்ற கைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவரின் விபரம் இரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

வீடியோஸ்


திருவாரூர்