தமிழக அனைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் 2018 அம் ஆண்டு முதல் மத்திய அரசு மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீட்டு திட்டத்தை செயல் படுத்திய நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் 5 ஆயிரம் கோடி ரூபாயை அபகரிக்க வழிவகுக்கிறது எனவும் காப்பீட்டு நிறுவனங்கள் தனது விருப்பத்திற்கு இழப்பீட்டை நிர்ணயம் செய்து மத்திய மாநில அரசுகள் வழங்கும் வேளாண் காப்பீட்டு க்கான பிரிமீயம் தொகை முழுவதையும் தவறான வகையில் அபகரிக்க முயற்சிப்பதாக பிஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.