வலங்கைமான் தாலுக்கா புலவர் நத்தம், நரிக்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலப் பரப்புகளில் செல்லக்கூடிய மின்கம்பிகள் மிகத் தாழ்வாக கை நீட்டினால் தொட்டுவிடும் தூரத்தில் அமைந்துள்ளன. இதனால் விவசாயிகள் அச்சத்துடன் வயலுக்கு சென்று திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வாக மின் கம்பிகள் செல்லும் வயல்களில் டிராக்டர் நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அந்த பகுதியில் மட்டும் விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்வதில் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் மேலும் அந்த பகுதியில் டிராக்டர் கொண்டு உழுவதற்கும் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள்
கை நீட்டினால் தொட்டுவிடும் தூரத்தில் உள்ள மின் கம்பிகள் செல்லும் பகுதியில் விவசாயிகள் விவசாய வேலை செய்யும் பொழுது மண்வெட்டி போன்ற பொருட்களைக் கொண்டு வேலை செய்யவும் அச்சப்படுகிறார்கள்
ஆகவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை நல்ல உயரத்தில் இழுத்துக்கட்டி டிராக்டர், நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியவை வயல்களில் சிரமம் இல்லாமல் செல்ல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.
இதுகுறித்து வலங்கைமான் மின்வாரிய செயற்பொறியாளர் இடம் கேட்ட பொழுது
தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை நல்ல உயரத்தில் இழுத்துக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.