பெண்கள் கபடி போட்டியில் எஸ்கே கல்லூரி முதலிடம்

69பார்த்தது
மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காம வள்ளி மகளிர் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபாடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து 42 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இன்று மாலை நடந்த இறுதி போட்டியில் சதாசிவம் கதிர்காம வள்ளி மகளிர் கல்லூரி அணி மற்றும் கரூர் அரசு மகளிர் கல்லூரி அணிகள் மோதின. இதில் மன்னார்குடி சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கல்லூரி அணி 43க்கு 21 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரி அணி 3-ம் இடம் பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் ஜி. சதாசிவம் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் சரவணகுமார் சவுத்ரி முன்னிலை வகித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் நாகரத்தினம் வரவேற்றார். நிகழ்ச்சி கலந்துகொண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் மற்றும் செயலாளர் மகபூப்ஜான் வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயமும் பரிசும் வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி