காந்தி ஜெயந்தியையொட்டி மது போதைக்கு எதிரான விழிப்பிணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம் மன்னார்குடியில் நடைபெற்றது.
மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்த நாளையொட்டி , திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலக சாதனை நிகழ்வாக , மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
தீரன் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் மன்னார்குடிஇருந்து பெரிய கோவிலில் இருந்து தொடங்கிய பேரணியில் 60 மாணவர்கள் பங்கேற்றனர் மன்னார்குடி சேரன்குளம் காரிக்கோட்டை எடமேலையூர் என வடுவூர் வரை சுமார் 32 கிலோமீட்டர் தூரம் மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்து பொதுமக்களுக்கு மது போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.