மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மூன்று ஆண்டுகளுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தல் மன்னார்குடியில் உள்ள ஏ கே எஸ் திருமண அரங்கில் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் 212 வாக்குகள் பெற்று s. ஜெயக்குமார் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
சங்கத்தின் செயலாளராக 154வாக்குகள் பெற்று மஹாலக்ஷ்மி அறிவானந்தன் தேர்வு செய்யப்பட்டார்.
சங்க பொருளாளராக 219 வாக்குகள் பெற்று மணிகண்டன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். இதே போல் சங்கத்தின் துணை தலைவராக ராதா கிருஷ்ணனும், துணை செயலாளராக மணிகண்டனும் தேர்வு செய்யப்பட்டனர்.