மன்னார்குடி இருக்க நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் முதல் பரிசையும் பெண்கள் பிரிவில் சக்தி பிரதர்ஸ் அணியும் கோப்பையை தட்டி சென்றது.
மன்னார்குடி அருகே பைங்காநாடு கிராமத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. பட்டுராசு கபடி கழகம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் திருவாரூர் கோயம்புத்தூர் ஈரோடு கன்னியாகுமரி நாகர்கோவில் சென்னை உட்பட ஆண்கள் பிரிவில் 19 அணிகளும் பெண்கள் பிரிவில் 14 அணிகளும் விளையாடினர். நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் முதல் பரிசையும், பெண்கள் பிரிவில் அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணியினர் முதல் பரிசை வென்றனர். இரண்டாம் பரிசை ஆண்கள் பிரிவில்
வடுவூர் புதுகை அணியினரும் பெண்கள் பிரிவில் ஈரோடு பி. கே. ஆர் அணிகளும் வென்றது. மூன்றாம் பரிசை ஆண்கள் பிரிவில் AZ ஆளந்தங்கரை அணிகளும், பெண்கள் பிரிவில் திருநெல்வேலி பாரதி கபடி அணி, கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகளும் மூன்றாம் பரிசை வென்றது. இரண்டு நாட்கள் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற்ற கபடி போட்டியை வடுவூர், காரக்கோட்டை, கட்டக்குடி பைங்காநாடு, துளசேந்திரபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெண்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.