வெங்கத்தூர்: ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து போராட்டம்

58பார்த்தது
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் வெங்கத்தூர் கிராமமானது 15 வது வார்டில் வருகிறது. மேலும் வெங்கத்தூர் ஏரியில் இருந்து விவசாயத்திற்கு நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஏரியில் சிலர் குப்பைகளை கொட்டியும், கழிவுநீரை திறந்து விட்டும் ஏரியை மாசுபடுத்தி விட்டனர்.
தற்போது இந்த ஏரியில் உள்ள நீர் மாசடைந்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கும் நிலையில் உள்ளது. மேலும், வெங்கத்தூர் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்
வெங்கத்தூர் பகுதியில் குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு மின் தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் 15 வது வார்டில் உள்ள வெங்கத்தூர் பகுதியை தனி ஊராட்சியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியில் கழிவுநீர் கலப்பதால் ஏரி மாசடைவதை கண்டித்து ஏரியில் கலக்கப்பட்ட மாசடைந்த தண்ணீரை பாட்டிலில் கொண்டு வந்து வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த வக்கீல் சசிகுமார் தலைமையில் 100க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி