திருவள்ளூர்: முங்காத்தம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

61பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் கிராமத்தில் அமைந்த பழமைவாய்ந்த அருள்மிகு முங்காத்தம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவின் ஆறாம் நாள் 8-10-2024 ஆலயத்தில் கொலு வைக்கப்பட்டு பரதநாட்டியம் விழா சிறப்பாக நடை பெற்றது.



நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில்களில் பரதநாட்டிய நிகழ்ச்சியை ஆர்எஸ் எம் ஸ்கில் டேவலேப்மெண்ட் மையத்துடன் இணைந்து சிவா நாட்டிய சேத்ரா குழுவினர் ஏற்பாட்டில் நாட்டிய குரு மோனிகா தத்தாத்ரேயர் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆனயானது திருவள்ளூர் பெரியகுப்பம் காமராஜபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கிராம பெரியவர்கள் பக்தர்கள் முன்னிலையில் நாட்டியம் அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கோயிலில் கொலு மண்டபம் வைக்கப்பட்டு மூங்காத்தாம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செல்வ விநாயகர் கோயில் சந்தான விநாயகர் கோயில் சிவா விஷ்ணுக்கோயில் ஆகிய இடங்களில் தொடந்து நவராத்திரியின் இறுதி நிகழ்வாக ஆயுத பூஜை வரை நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி