திருவள்ளூர்: பருவமழையை எதிர்கொள்ள ஆலோசனை கூட்டம்

81பார்த்தது
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் சிறுபான்மை துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் கூட்டாரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் பங்கேற்றார்.

இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைச்சந்திர சேகர், திருத்தணி எஸ் சந்திரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் அனைத்து துறை அதிகாரிகளும், பருவமழை எதிர் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு உள்ளதாகவும் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி