திருவள்ளூர்: ஆட்சியர் அலுவலகத்தில் மழை அவதியுற்ற மக்கள்

62பார்த்தது
திருவள்ளுவர் சுற்றுவட்டாரங்களில் கொட்டி தீர்த்த கனமழை திருவள்ளூர் திருப்பாச்சூர் புல்லரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொட்டிய மழையால் பொதுமக்கள் அவதி உற்றனர் நண்பகலில் கருமேகம் சூழ்ந்து திடீரென கன மழை வெளுத்து வாங்கியது இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று முறையிட்டு மனு அளிக்க வந்த பொதுமக்கள் குறிப்பாக வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்கள் மழை நீரில் அவதி அடைந்தனர் தேங்கிய மழை நீரில் செல்ல முடியாமல் வாகனங்களில் வந்த மாற்றுத்திறனாளிகளும் தவித்தனர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறு மழை பெய்தாலும் குட்டைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி விடுவதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்த விகார் மாடலில் பல லட்சம் ரூபாய் செலவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா சிலை புத்தர் சிலை கலைஞரின் திருவுருவச் சிலை என வடிவமைக்கப்பட்டு 2000 புத்தகங்களுடன் குளிர் ஊட்டப்பட்ட அறையில் நவீன நூலகத்தை கொட்டும் மழையில் அமைத்து வருகின்றனர் அதனை வருகிற ஒன்பதாம் தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறக்க உள்ள நிலையில் அதன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன அவற்றை சிறுபான்மை துறை அமைச்சர் சாமு நாசர் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன் விஜி ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி