வனப்பகுதியில் சுகாதாரக் கழிப்பிடம்: அரசு பணம் வீண்

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தில் அடங்கியது அம்மம்பாக்கம் கிராமம்
இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக சரசு பூபாலன் என்பவர் பதவி வகித்து வருகிறார்,
அவரது கணவர் பூபாலன் என்பவர் திமுகவில் கிளை செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சீத்தஞ்சேரி அருகே உள்ள காப்புக்காடை ஒட்டிய பகுதியில் பொது கழிப்பிடம் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது,
இங்கு கட்டப்பட்டு வரும் கழிப்பிடத்திற்கு அருகிலேயே சுமார் 10 அடியில்
பத்துக்கும் மேற்பட்ட நீரேற்றும் குடிநீர் திட்ட நிலையம் உள்ள நிலையில், மழைக்காலங்களில் இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் குடிநீரில் கலக்கும் அபாயமும் உள்ளது.
மேலும் கிராமத்திற்கும் கழிப்பிடம் கட்டும் இடத்திற்கும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் கழிப்பிடம் கட்டுவதால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று சமூக ஆர்வலர் ஏகாம்பரம் என்பவர் பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்றும், கழிப்பிடம் கட்டப்பட்டு வரும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது எனவும் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தாங்கள் அப்படிதான் கட்டுவோம் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் திமுக கிளைச் செயலாளர் பூபாலன் மிரட்டல் கொடுப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி