திருவள்ளூர் பகுதி மற்றும் மோதிலால் தெரு என 2 இடங்களில் பிரம்மாண்டமான கிளைகளுடன் இயங்கி வரும் பிரபல துணிக்கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிகத்திற்கு ஏற்றார் போல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை எனவும் விற்பனை செய்யப்படும் துணிகளுக்கு முறையாக ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை எனவும் எழுந்த புகாரையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் 4 கார்களில் சென்னையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், துணக்கடையின் ஷட்டர்களை மூடிக்கொண்டு கடையில் வாங்கப்பட்ட துணிகளுக்கு முறையாக ஜிஎஸ்டி பில் உள்ளதா? எவ்வளவு ரூபாய்க்கு துணி வாங்கப்படுகிறது? எவ்வளவு ரூபாய்க்கு துணி விற்கப்படுகிறது குறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
தீபாவளி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து விழாக்காலம் இருப்பதால் பொது மக்கள் அதிகளவில் குவிந்து புத்தாடைகளை வாங்கி செல்லும் நிலையில், தரமான துணிகளை விற்பனை செய்கிறார்களா? அல்லது எக்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து விலை மலிவான துணிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா? என்றும் கடைகளில் உள்ள கம்ப்யூட்டரில் வாங்கப்பட்டுள்ள மற்றும் விற்கப்பட்டுள்ள பில்லை சோதனை செய்து வருகின்றனர்.