திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது இதில்
சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் துவக்கி வைத்தனர். வேலைவாய்ப்பு முகாமில் 250க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் மூலம் சுமார் 3000 பேர் பங்கேற்றனர் முதல் கட்டமாக 500 பேருக்கு நியமன ஆணைகளை அமைச்சர் சாமு நாசர் வழங்கி பேசுகையில்
என்சிசி
தேசிய மாணவர் படை பெயரில் தமிழை பயன்படுத்துங்கள் என அரசு கல்லூரி முதல்வர் தில்லைநாயகிக்கு வேண்டுகோள் வைத்தார். முன்னதாக அமைச்சரை என்சிசி மாணவர்கள் பரேட் மார்ச் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வந்தனர் அதில் அவர்கள் அணிந்திருந்த சீருடையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் இருந்ததால் தமிழிலும் பெயரை பயன்படுத்த வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது வேலைவாய்ப்பு முகாமில்
கல்லூரி முதல்வர் தில்லை நாயகி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டீஜே கோவிந்தராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.