திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர், வைஷாலி நகர், பகுதியில்
சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில்
பல்வேறு சமூகத்து சார்ந்த 161 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு
இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை எனவும் , ஆனால்
அரசாங்கம் வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்,
இருப்பினும் வீட்டிற்கு பட்டா இல்லாததால் மின் இணைப்புகள், போன்ற அத்தியாவசியமான எந்த ஒரு சலுகைகளும் பெற முடியவில்லை எனவும்
இது குறித்து பல ஆண்டுகளாக வருவாய் துறை அதிகாரிகளிடமும், மற்றும், மாவட்ட ஆட்சியரிடமும், மனுக்கள் அளித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை
என்று மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்ப்பட்ட மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில குழு செயலாளர் நீல வானத்து நிலவன், மற்றும்
பாலா, பவுத்ஆனந்த்,
சுந்தரமூர்த்தி, ஆகியோர்
தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்
மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம், கோரிக்கை மனு அளித்தனர்,
மனுவை பெற்றுக் கொண்ட
மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்துள்ளார்.