பூந்தமல்லி அருகே வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் மணி @ ரேவதி ஓய்வு பெற்ற செவிலியர் தனியாக இருந்தபோது அங்கு வந்த நபர் ஆன்லைனில் மருந்துகள் ஆர்டர் செய்தது வந்துள்ளதாக கூறியுள்ளார் கத்தியை காட்டி கையில் குத்திவிட்டு பணம் மற்றும் நகையை கேட்டு மர்ம நபர் மிரட்டி உள்ளார். திருடன், திருடன் என கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையில் மெடிக்கல் ரெப் நாகமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் நாகமுத்து விடம் விசாரணை செய்தபோது தான் மெடிக்கல் தொழில் செய்வதால் வளசரவாக்கம் பகுதிகளில் அதிகம் சுற்றி வர வாய்ப்பு கிடைப்பதாலும் குறிப்பாக பூட்டி இருக்கும் வீடுகள் பற்றி தெரியும் எனவும் இதன் அருகே மருத்துவமனை உள்ள நிலையில் அடிக்கடி அங்கு மருத்துவரை மருந்துகள் விற்பனை தொடர்பாக சந்திக்க வருவேன் எனவும் அப்படி வரும்போது அருகே உள்ள இந்த வீடு பூட்டி இருக்கும் எனவும் இந்த நிலையில் மெடிக்கல் ரெப் தொழிலில் போதிய வருமானம் வரவில்லை கடன் தொல்லை அதிகம் இருந்த காரணத்தால் வேற வழியின்றி திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் அப்படி ஈடுபட்டபோது தப்பி சென்ற நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.