

திருவள்ளூர்: திமுக,பாஜக சுவர் விளம்பரம் செய்வதில் மோதல்.. பரபரப்பு வீடியோ
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் ரயில் நிலையம் அருகே மா.பொ.சி சாலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான சுவரில் பாஜகவினர் தாமரை சின்னம் வரைந்து வருகின்றனர். மிக பிரதான சாலையில் உள்ள சுவர் முழுவதும் தாமரை சின்னம் எழுதி வரும் நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு சுவர் விளம்பரம் எழுத திமுகவினர் முயற்சி செய்தனர். அதனை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட இளைஞரணி திமுக அமைப்பாளர் திருத்தணி ம.கிரன் தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திருத்தணி நகர திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் மா.பொ.சி சாலையில் குவிந்து, சுவரில் திமுக விளம்பரம் எழுத தொடங்கியதால் பாஜகவினர் மற்றும் திமுகவினர் உடைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் 'கெட் அவுட் மோடி' என்று கோஷங்கள் எழுப்பி பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக பாஜகவைச் சேர்ந்தவர்களும் 'கோ பேக் ஸ்டாலின்' என்று கோஷங்கள் எழுப்பியதால் திமுக மற்றும் பாஜக இடையே போட்டி போட்டி நிலவியது. இதனால் திருத்தணி மா.பொ.சி சாலையில் இரு கட்சியினர் இடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது.