திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில். அரசு கலைக்கல்லூரி அருக எதிரேதிரே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பைக் ஒன்று திடீரென சாலையின் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பின்ன அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் காயம்பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையில் திருத்தணி அருகே மேதினிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி அஜித் (23, ) இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்ற போது அப்போது திருத்தணி நோக்கி எதிரே வந்த ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி ஆகியோர் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்ற வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.