பொன்னேரி - Ponneri

கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று நடைபெற்றது. 13 நாட்கள் நடைபெறும் விழாவில் ஐந்தாம் நாள் விழாவாக வருகிற 17-4-25 கருடோற்சவ சந்திப்பு விழாவும், ஏழாம் நாள் 19-4-25 தேர் திருவிழாவும், பதினொராம் நாள் 23-4-25 அன்று தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. . பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரி கிருஷ்ண பெருமாளை தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా