பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருத்தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அகத்தீஸ்வரர் திருக்கோவிலில்
பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 3 ஆம் தேதி
கொடியேற்றத்துடன்
தொடங்கி நடைபெற்று வருகிறது 7 ஆம் நாள் முக்கிய விழாவாக திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது அகத்தீஸ்வரர் ஆனந்தவல்லி விநாயகர் முருகன் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு சிறப்பாக நடைபெற்று.
தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அகத்தீஸ்வரரை வழிபாடு செய்தனர் தேரோட்ட நிகழ்ச்சியில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் பொன்னேரி நகர தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்
வருகிற 12-ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது