திருவள்ளூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் செவ்வாய் கிழமை தினமான இன்று முருகனை வழிபட சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் காத்திருந்து பொதுமக்கள் குடைகளைப் பிடித்த படியும் தலைகளில் துணியை மூடி வெய்யிலில் அவதி அடைந்து முருகனை வழிபட்டு சென்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்படுவதால் அவர்களுக்கு போதிய வாகனங்களில் இருந்து இடமில்லாததாலும் கோவிலுக்கு நடந்து வர முதியவர்கள் சிறுவர்கள் என அனைவரும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர் சிறுவாபுரி கிராமத்தில் உள்ள வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில் நிலவுகிறது எனவே
சுட்டெரிக்கும் கோடை வெயில் காலம் என்பதால் பக்தர்கள் எளிமையாக கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்