பங்குனி உத்திர பிரம்மோற்சவம்
வட காஞ்சி மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில்
பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா
கொடியேற்றத்துடன் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது
முக்கிய விழாவாக
இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் மற்றும் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் முன்னாள் எம்எல்ஏ பலராமன் கோவில் செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முக்கிய தேரடி தெரு ராஜவீதி வீதி முக்கிய வீதிகள் வழியாக தேரினை வடம் பிடித்து இழுத்து வந்து சிவபெருமானை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்