அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

73பார்த்தது
பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு அமைதிப் பேச்சு வார்த்தையில் அறிவுறுத்தல் பத்து நாட்களுக்குள் மீனவர்கள் தரப்பிடையே பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ள பொன்னேரி வருவாய்த் துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்



திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையோரம் உள்ள கோரைகுப்பம் மீனவர்கள் கூனங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மீனவர்கள் இடையே மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதால் இருதரப்பையும் அழைத்து வருவாய்த்துறையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர் கடலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை சுருக்குவலை போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர் கூனங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் இரட்டை மடி வலை மாப்பு வகை மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும் என கூட்டத்தில் மீனவர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து
மீன்வளத்துறை அதிகாரி அஜய் ஆனந்த் வட்டாட்சியர் சோமசுந்தரம் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பின்னர் 10 நாட்களுக்குள் இருதரப்பு மீனவர்களும் சமரசமாக பேசி அனுமதிக்கப்பட்ட மீன் வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இரு தரப்பு மீனவர்களை அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி