

திருவள்ளூர்: வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அம்பேத்கர் சிலை முன்பாக இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கைகளில் எதிர்ப்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி திருவெற்றியூர் செல்லும் சாலையில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் சிறிது நேரம் ஏற்பட்டது. அப்போது பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தபோது உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி 108 ஆம்புலன்ஸை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வழி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பரபரப்பாக அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்லும் பொன்னேரி திருவெற்றியூர் சாலையில் தமிழக வெற்றி கழகத்தினர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.