திருத்தணியில் காற்றில் பறக்கும் அரசு உத்தரவு

77பார்த்தது
மகாவீர் ஜெயந்திக்கு மாமிச விற்பனை மற்றும் மது விற்பனை அரசு தடை செய்துள்ளது ஆனால் அதனையும் மீறி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் மேட்டு தெரு, காந்தி ரோடு, அரக்கோணம் ரோடு, பை-பாஸ் திருப்பதி ரோடு, சித்தூர் ரோடு, பி. எஸ். என். எல் அலுவலகம் அருகில், போன்ற பகுதிகளில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மற்றும் மீன் இறைச்சி ஆகியவை மாமிச விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது
மேலும் இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்தொடைப்புக்கு மூடுங்கள் மூடுங்கள் என்று கூறிவிட்டு கால்களில் விழுகிறேன் என்று கூறிவிட்டு அவர்களை மூட சொல்ல கெஞ்சுகிறார்கள் ஆனால் அவர்கள் மூடாமல் கடையை மூடாமல் மாமிச விற்பனையை தங்கு தடையின்றி அரசியல்வாதிகள் உதவியுடன் விற்பனை நடைபெற்று வருகிறது
ஜோராக நடைபெற்று வரும் மாமிச விற்பனை மகாவீர் ஜெயந்தி அரசு உத்தரவு திருத்தணியில் காற்றில் பறக்கிறது இது ஒரு புறம் இருக்க திருத்தணி அரக்கோணம் சாலை பகுதியில் கள்ளத்தனமாக மதுபான விற்பனையை தொடங்கிய சமூக விரோதிகள் கள்ளத்தனமான முறையில் மதுபான விற்பனையை செய்து வருகின்றனர் இதனை வாங்கி காலையில் அருந்தி கொண்டிருக்கும் மது பிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி