பொன்னேரி - Ponneri

திருவள்ளூர்: ஆதிதிராவிட நல சமுதாய நலக்கூடம்.. அமைச்சர் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மனூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம் ரூ.49 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், பழங்குடியின மக்களுக்கு ஆணையம், துப்புரவு தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரியம், ஆதிதிராவிடர்களுக்கு நிதி பயன்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 100% பயன்படுத்தப்படுகிறதா, அவர்களுக்கான தேவைகள் குறித்தும் கண்காணிப்பு குழு ஆய்வு செய்கிறது என்றும், ஆதிதிராவிடர்களுக்கு தனி வாரியம் அமைத்தது திராவிட மாடல் அரசு என்றும், ஆதிதிராவிடர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதாகவும், ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா, பயோமெட்ரிக் அதிக அளவில் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.  பழங்குடியினர் சான்று பெறுவதில் பல நடைமுறைகள் உள்ளதால் காலதாமதம் ஏற்படும். பின்னர் உரிய முறையில் வழங்கப்படும் என்றும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பஞ்சமி நிலங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా