திருவள்ளூர்: பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி

69பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஏலியம்பேடு ஊராட்சியில் வசிக்கும் பொது மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அதனை கண்டித்து தங்கள் குடும்பத்துடன் கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொன்னேரி அண்ணா சிலையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை காவல்துறையினர் அனுமதி இல்லை எனக்கூறி மறுத்து தடுத்து நிறுத்தி சமரசம் மேற்கொண்டனர். வீட்டுமனை பட்டா வழங்க வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் சிவகுமார், கோட்டாட்சியர் உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் சமரசம் மேற்கொண்டு பல ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாவை வழங்க பரிந்துரை செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி