மாதவரம் - Madhavaram

திருவள்ளூர்: பட்டாகத்திகளுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது

புழல் கதிர்வேடு மதுரவாயில் செல்லும் மேம்பாலத்தில் புழல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்கும்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார், கொடுங்கையூர் மெக்கானிக் ரஞ்சித்குமார், அன்பரசன், வில்லிவாக்கம் பழனி ஆகியோர் என தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ஒரு பட்டாக்கத்தியும் மது பாட்டில்களும் சிக்கின. தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், துளசி நகரில் வழக்கறிஞர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் இருவர் வாடகைக்கு இருப்பதாகவும், அவர்கள் வாடகை பணம் தராமலும் வீட்டை காலி செய்யாமலும் 2 வருட காலம் கடத்தி வந்ததாகவும், இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும்,  இதற்கிடையில் வீட்டை காலி செய்ய அடியாட்களை ஏவி குடியிருப்பவர்களை மிரட்டுவதற்காக பட்டாக்கத்தியுடன் சென்றதாக தெரியவந்தது. 4 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம், 2 பட்டாக்கத்திகளையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా