மந்தகதியில் சோழவரம் ஏரி பராமரிப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

66பார்த்தது
சோழவரம் ஏரியில்
40 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்



சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் தேக்கங்களில் ஒன்றான சோழவரம் ஏரி அதன் மொத்த உயரம் 18. 86 அடியில் தற்போது 3. 20 அடி நீர் இருப்பு உள்ளது அதன் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் தற்போது வெறும் 138 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை நீர்வளம் கொசத்தலை ஆற்றின் சார்பில் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஏரி கரை மற்றும் மதகுகளை புணரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மு பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அங்கிருந்த பொதுப்பணித்துறை நீர்வள அதிகாரிளிடம் பணிகளை விரைந்து முடித்திட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி