முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம்

74பார்த்தது
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மாநில வர்த்தக அணி சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரி பஜார் வீதியில் பொது கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ்
தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா மற்றும் அமைச்சர் சாமு நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர் பொதுக்கூட்டத்தில்
திருச்சி சிவா பேசுகையில்
பாஜக மத்திய அரசு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊடுருவி மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டனர்
அந்த காலத்தில் படையெடுப்பிற்கு வந்தவர்கள் நாட்டிற்குள் புகுந்து எப்படி சூறை ஆடுவார்களோ அதைப்போல பல மாநிலங்களில் வடக்கில் நேரடியாகவும் மறைமுகமாக திருப்பங்களை ஏற்படுத்தி சாதகமான சூழல்களை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றனர் எதிர் கட்சிகள் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றுவது என வடக்கில் எல்லா மாநிலங்களையும் தங்களிடத்தில் கொண்டு வந்து விட்டார்கள் இந்த நிலையில் எந்த காலத்திலும் இவர்களுடைய சூழ்ச்சிக்கோ வஞ்சனைக்ககோ வணங்காது நிமிர்ந்து நிற்கக்கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் கருப்பு சிவப்பு கொடிபறந்து கொண்டிருப்பதுதான்
என அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி