புனே - கோயம்புத்தூர் இடையிலான குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு அருகே வந்துள்ளது. அப்போது, அதிகாலை 4 மணியளவில் ஏசி பெட்டியில் பயணித்த 8 வயது சிறுமிக்கு, படுக்கை விரிப்புகளை மாற்றும் ஒப்பந்த ஊழியர் நவீதம் சிங் (30) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது, அந்த சிறுமி கூச்சலிட தொடங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் வந்த நிலையில், மெதுவாக சென்றுகொண்டிருந்த ரயிலில் இருந்து குதித்து தப்பினார். தொடர்ந்து, அவரை ஈரோடு ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்.