சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டம் துவங்கி நடந்து வருகிறது. இதில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி, "நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள் தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் நமக்கு தரப்பட்ட பரிசுதான் தொகுதி மறுசீரமைப்பு" என்றார்.