முதல்வர் வருகை முன்னேற்பாடுகள் நேரில் பார்வையிட்ட அமைச்சர்

79பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை துறை அமைச்சர் சாமு நாசர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் விழா நடக்கும் இடத்தை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர். அப்போது இடத்தை சுற்றிப் பார்த்துவிட்டு அமர்வதற்கு வந்த அமைச்சர் நாசர் உட்காருவதற்கு இருக்கையை எடுத்து தரும்படி கூற அதை பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகலிங்கம் அவர்களுடைய மகன் மோகன்ராஜ் கட்சி தொண்டர் ஒருவரிடம் கூற அவர் அதனை அருகில் தெரிவித்ததை பார்த்து அமைச்சர் நாசர் திடீரென்று கோபப்பட்டு அவரை பார்த்து ஏய் நீ எடுத்த என்ன குறைந்தா போய் விடுவாய் என்று கூறி அவரை முதுகின் பின்னால் தட்டினார் இதனால் அருகில் இருந்த கட்சியினர் வேறு இருக்கையை எடுத்து அமர்வதற்கு உடனடியாக அங்கு போட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றிப் பார்க்கும் வரை அமைதியாக இருந்த அமைச்சர் நாசர் திடீரென கட்சி க்காரர்கள் இடத்திலேயே டென்ஷன் ஆகி சூடாக பேசியது மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி