திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியில் இரண்டு பேக்கரி ஷாப் நடத்தி வருபவர் தினேஷ் குமார் மற்றும் கலாவதி தம்பதியர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு ஊரிலிருந்து தொழில் செய்வதற்காக இங்கு வந்துள்ளனர்.
தினேஷ் குமார் ஒரு கடையிலும் மனைவி கலாவதி வேறொரு கடையிலும் பணி செய்வது வழக்கம் அப்படி கடையில் பணி செய்து விட்டு வீட்டிற்கு காலாவதி முன்னதாகவே வந்து விடுவார் அதுபோல் நேற்று இரவு ஒன்பதரை மணியளவில் கலாவதி வீட்டிற்கு வரும் பொழுது எதிர் முனையிலிருந்து ஸ்ப்ளெண்டர் பைக் உடன் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் ஹெல்மெட் அணிந்திருந்த நபர் ஒருவர் கலாவதியை நோக்கி வந்து அவர் அணிந்திருந்த தாலி செயினை அறுத்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கலாவதி அந்த நபர் இடத்தில் இருந்து செயினை லாவகமாக பிடித்ததால் வேறு வழி இல்லாமல் அந்த நபர் விட்டால் போதும் என்று ஓடி உள்ளார்.
மேலும் இதுகுறித்து கலாபதியின் கணவர் தினேஷ் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட மீஞசூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் செயின் பறிக்க வந்த நபர் யார் என்பது குறித்து அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஏதிலாவது அவனின் உருவம் தெரிகிறதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.