ஊத்துக்கோட்டை: கொன்று புதைக்க பட்ட கல்லூரி மாணவன்; 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவை சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் தனசேகர் மகன் தினேஷ் (வயது19) என்பவரை 15 பேர் அடங்கிய கும்பல் தங்களை காவல் நிலையத்தில் காட்டிக் கொடுத்து விடுவார் என்ற விரோதத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக ஆந்திர எல்லையான சென்னேரி காட்டு பகுதியில் வெட்டி கொலை செய்து குழி தோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பதாக பெய்த மழையினால் காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசப்பட்டதை அறிந்த அருகில் உள்ள மக்கள் சக்தியவேடு காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையி காவலர்கள் இதுகுறித்து விசாரித்து ஆய்வு செய்து ஊத்துக்கோட்டை சி1 காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் பிரேதத்தை தோண்டி எடுத்ததாக கூறப்படுகிகிறது. ஊத்துக்கோட்டை சி1 காவல் நிலைய அதிகாரிகள் இது சம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நாகா என்ற நாகேஷ் ( 22) , கார்த்திக் ( 22) என்ற இரண்டு பேரை கைது செய்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.