திருத்தணி: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
திருத்தணி அருகே பொன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் ரூட்டு தல விவகாரத்தில் சுந்தரை பலமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவன் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கேட்டு தலித் மக்கள் முன்னணி மற்றும் மாணவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் மதியரசன் பேச்சுவார்த்தத்தில் ஈடுபட்டார். ஆனால் ஆர்ப்பாட்டத்தை கைவிடாததால் அவர்களை அப்புறப்படுத்திய போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி