தொடர் கன மழை காரணமாக கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக
சிங்கிலி மேடு ஆத்திரேயமங்கலம்
மடிமை கண்டிகை தேவம்பட்டு ஆசான புதூர் இலுப்பாக்கம் குமரஞ்சேரி எல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள்
நீரில் மூழ்கி சேதம் ஆகியுள்ளது விவசாய நிலங்களில்
மழைநீர் செல்லும் வெள்ள நீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களை ஆங்காங்கே தனியார் ஆக்கிரமித்து உள்ளதால் விவசாய நிலங்களில் வெள்ள நீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.