உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் வம்ஷ் (8) என்ற சிறுவன் தீபாவளியன்று கண்ணாடியில் பட்டாசை வைத்து வெடித்துள்ளான். இதனால், கண்ணாடி உடைந்து, கண்ணாடித் துண்டு அவரது தொண்டையைத் துளைத்துள்ளது. உடனடியாக குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். சிறுவனின் மரணம் குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.