கும்மிடிப்பூண்டி: அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

74பார்த்தது
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டியில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பி வி ரமணா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னால் அமைச்சர் பொன்னையன்
கும்மிடிப்பூண்டி முன்னால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் யாரையும் விடவில்லை என்றும் அமலாக்கத்துறையினர் முன்னால் அமைச்சர் வைத்தியலிங்கம் தொடர்பான பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்வது குறித்து வைத்தியலிங்கம் செய்த தவறு அவருக்கு தான் தெரியும்
என்றும் அதிமுகவினர் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் விஜய் கட்சியில் சேர போவதாக வரும் தகவல் வதந்தி என்றும் பாஜகவும் திமுகவும் வாக்கு இயந்திரத்தில்
முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும் திமுக வில் இருந்து பிரியும் கட்சிகள் தங்களோடு கூட்டணிக்கு வருவார்கள் அற்புதமான கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் தெரிவித்தார்
பின்னர் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா பேசுகையில் அதிமுக வலுவான கூட்டணி அமைத்து 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி