மாநெல்லூர்: ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

77பார்த்தது
மாநெல்லூர் சந்தப்பேட்டை
அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்தனர்


திருவள்ளூர் மாவட்டம் மாநெல்லூர் சந்தப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவானது இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் சுந்தர விநாயகருக்கும் கும்பாபிஷேகமானது நடத்தப்பட்டது பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது இதில் மாதர்பாக்கம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி