தூய்மை பாரத இயக்கம் மத்திய நிதி குழு மானியத்தில் வழங்கப்பட்ட 15 குப்பை அள்ளும் மின்கல வாகனங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் கும்மிடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிறுத்தி வைப்பு
ஊராட்சிகளுக்கு விரைந்து வழங்கிட கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு
தூய்மை பாரத இயக்கம்15வது மத்திய நிதி குழு மானியத்தில் மின்கல குப்பை அள்ளும் வாகனங்கள் 15 வாகனங்கள் புதிதாக வழங்கப்பட்ட நிலையில் அவை ஊராட்சிகளுக்கு முறையாக வழங்கப்படாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளது ஊராட்சிகளில் ஆங்காங்கே தேங்கி கிடைக்கும் குப்பைகளை பணியாளர்கள் எளிதில் அகற்றும் வகையில் விரைந்து வாகனங்களை வழங்க கும்முடிபூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.