திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் வயது 26 என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் மருத்துவருக்கு ஓட்டுனராக உள்ளார். நேற்று மருத்துவரை ரயில் நிலையம் வர அழைத்து வந்தவரை மீன் மார்க்கெட் அருகே இரு சக்கர வாகனத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ஹாரன் அடித்ததில் ஆத்திரமடைந்த இருவரும் கைப்பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கோகுலை குத்தியுள்ளனர். இதனால் கோகுல் காயம் அடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து கத்தியால் குத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.