தள்ளு தள்ளு அமைச்சர் ஆய்வுக்கு வந்தபோது பொன்னேரி வட்டாட்சியரின் பழைய அரசு வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் தள்ளு தள்ளு என வாகனத்தை தள்ளி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செல்லும் பக்தர்கள் வாகன நெரிசலால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி வந்தால் நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆய்வுக்கு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவா வேலு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமு நாசர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் வந்தனர்.
அப்போது பொன்னேரி வட்டாட்சியரின் அரசு பழைய வாகனம் திடீரென சாலையிலேயே நின்று போனதால் வேறு வழி இல்லாமல் வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாகனத்தை உடனடியாக தள்ளி வேகமாக ஓடிச் சென்று வட்டாட்சியர் சிவக்குமார் வாகனத்தில் ஏறி அமைச்சர்களை ஆய்வுக்கு அழைத்துச் சென்றார். கடந்த பல ஆண்டுகளாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரின் பழைய வாகனம் மாற்றப்படாமல் அதனை பயன்படுத்தி வருவதால் அடிக்கடி இதுபோன்று பழுதுகள் ஏற்படுவதால் வாகனத்தை தள்ளோ தள்ளு என தள்ளும் நிலை ஏற்படுகிறது. அமைச்சர் ஆய்வின்போது வாகனம் பழுதாகியதால் வட்டாட்சியர் சிவக்குமார் ஓடிச்சென்று வாகனத்தில் ஏறி சென்று அமைச்சர்களுடன் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.